• May 02 2024

அடேய் இந்த ஷோவைப் பார்த்து தான் என் பையன் வளரணும்னு அவசியமே இல்லை- கொந்தளித்த அசீம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


மொத்தம் 106 நாட்கள் நடந்த ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இதன் டைட்டில் வின்னராக அசீம் தெரிவு செய்யப்பட்டார். இரண்டாம் மூன்றாம் இடங்களில் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் பெற்றிருந்தனர்.தொடர்ந்து பிக் பாஸ் குறித்த பேச்சுகள் இணையத்தில் பரவலாக இருந்து வருகிறது.

 இதற்கு காரணம் பிக் பாஸ் போட்டியாளர்கள் பல்வேறு இன்டர்வியூகள் கொடுத்து வருவதும், பல இடங்களில் செல்லும் போது மக்கள் அவருக்கு கொடுக்கும் அமோக வரவேற்பும் ஆகும். அப்படி இருக்கையில், பிரபல சேனல் நடத்திய"மக்களுடன் அசீம்" என்ற பிரத்யேக நிகழ்ச்சியில் அசீம் கலந்து கொண்டார். அதில் பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களையும் தன் மீதான விமர்சனங்களுக்கான விளக்கத்தையும் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் தனது மகன் குறித்து அசிம் பேசியுள்ள விஷயம், தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே தனது மகன் குறித்து நிறைய உருக்கமான விஷயங்களை பேசி இருந்தார் அசிம். அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் அசிம் பகிர்ந்திருந்தார். இதனிடையே பிக் பாஸ் வீட்டில் அசிம் அதிகம் கோபப்பட்டதால் அவருடைய மகனுக்கு தப்பான முன்னுதாரணமாக அவர் இருக்கக்கூடும் என்ற கருத்து ஒன்று பரவலாக இருந்தது


இது பற்றி தற்போது மகன் குறித்த மீம் ஒன்றை பார்த்த போது விளக்கம் கொடுத்த அசீம், "எனக்கு என் பையன் தான் எல்லாமே. அது உண்மைதான். இந்த ஷோல இப்படி கோபப்படுறீங்களே, இதை பார்த்து உங்க மகன் என்ன நினைப்பாரு. அடேய், என் மகன் கூட டைம் Spend பண்ண எனக்கு பல்லாயிரம் நாள் இருக்குடா. அந்த ஷோவ பாத்து தான் என் பையன் வளரணும்னு அவசியமே கிடையாது.


நான் அப்படி ஒண்ணும் சொசைட்டிக்கு தப்பா பேசல. சொசைட்டிக்கு தப்பா பேசினவங்க எல்லாம் ஜாலியா போயிட்டு இருக்காங்க. அதனால சொசைட்டிக்கு யாரு தப்பா பேசினாங்கன்னு தெரியும். என் கோபம் தான் உள்ள இருந்துச்சே தவிர காழ்ப்புணர்ச்சி காரணமா யாரையும் நான் எதுவும் பேசல. அதனால என் மகன் இந்த சமுதாயத்தில் வளர்வதற்கு எந்த வகையிலும் இந்த ஷோ பார்த்து வளரமாட்டான்" என அசீம் குறிப்பிட்டார்.


Advertisement

Advertisement

Advertisement