• May 07 2024

2 திருமணம்...கடைசியில் சரத்பாபுவிற்கு கிடைத்த தனிமை... ரகசியங்களை உடைத்த பயில்வான்!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

 தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள சரத்பாபு.  அத்தோடு 1973ம் ஆண்டு திரைத்துறையில் நடிகராக நுழைந்தார். அதன்பின்பு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

  எனினும் கடந்த சில மாதமாக செப்சிஸ் என்கிற அரிய வகைநோயால் பாதிக்கப்பட்டிருந்த சரத்பாபு நேற்று ஹைதராபாத்தில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலிக்குப் பின்னர் இறுதிச் சடங்கு நடைபெற்று மாலை 3 மணி அளவில் கிண்டியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறுஇருக்கையில்  மறைந்த நடிகர் சரத்பாபு குறித்து மூத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் உருக்கமாக பேசி உள்ளார். அத்தோடு அதில், ஆந்திராவில் பிறந்த சரத்பாபுவின் உண்மையான பெயர் சத்ய பாபு, கே பாலசந்தர் தான் இவருக்கு சரத்பாபு என்று பெயர்வைத்தார். அதே பெயருடன் தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். கே பாலச்சந்தர், பாலு மகேந்திராவிற்கு பிடித்தமான நடிகர்.

சரத்பாபுவை நாம் எப்படி திரையில் பார்க்கிறோமே அப்படித்தான், நிஜ வாழ்க்கையிலும் இருப்பார். ஆர்ப்பாட்டம் இல்லாத எதார்த்த நடிகர், யாரிடமும் இவர் அதிர்ந்து பேசியது இல்லை. படப்பிடிப்புக்கு வந்தாலும், அமைதியாகவே இருப்பார்.  எனினும்  குறிப்பாக திரைத்துறையில் இத்தனை ஆண்டுகள் இருந்த போதும் இதுவரை எந்தவிதமான கிசுகிசுவிலும் இவர் சிக்கியது இல்லை. நடிகர் ரஜினிகாந்திற்கு மிகவும் பிடித்தமானவர் என்பதால், ரஜினி நடித்த பலப்படங்களில் இவரும் நடித்து இருப்பார்.

இரண்டு மனைவிகள் : மறைந்த நடிகர் சரத்பாபுவுக்கு 2 மனைவிகள். 1971ம் அண்டு தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த நடிகை ரமா பிரபாவை திருமணம் செய்து கொண்டார். அத்தோடு இவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் நண்பர்களாகவே பிரிந்துவிட்டனர். எனினும்  அதன் பின்னர் சரத்பாபு, எம்.என் நம்பியாரின் மகள் சினேகலதா தீட்சித் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

 நம்பியாரின் மகள் சினேகா ஏற்கனவே கோவிந்த் மேனன் என்பவரை திருமணம் செய்து விவாகரத்தானவர். எம்.என் நம்பியார் சரத்பாபுவை ஒருபோதும் தனது மருமகன் என்று எந்த இடத்திலும் சொன்னது இல்லை. 1990 ஆண்டு சரத்பாபு மற்றும் சினேகா திருமணம் செய்து கொண்டு சுமார் பத்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் 2011ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இரண்டு திருமணம் செய்த போதும் சரத்பாபு கடைசி காலத்தில் வாழ்ந்து வந்தார் என்பதுதான் மிகவும் வருத்தமான என பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement