• Apr 27 2024

முக்கிய நபருடன் நெருக்கமாக இருக்கும் 19வயது நடிகை ரவீனா தாஹா... ரொமாண்டிக் புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'மௌன ராகம்' சீரியலில் சக்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை ஈர்த்தவர் நடிகை ரவீனா தாஹா. அதுமட்டுமல்லாது சன் டிவியில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான தங்கம் சீரியலிலும் சிறு குழந்தையாக நடித்திருந்தார் ரவீனா தாஹா.


அத்தோடு விஜய்யின் தீவிர ரசிகையான ரவீனா விஜய்யின் ஜில்லா, புலி உள்ளிட்ட படங்களிலும் பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களிலும் சிறு வயதுப் பெண்ணாக நடித்தார். 

இவ்வாறாக சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலுமே பிசியாக இருந்து வரும் ரவீனா தாஹா சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதில் இவர் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.


மேலும் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வந்த ஜோடி நம்பர் ஒன் 9 சீசனில் பங்கேற்ற ரவீனா தாஹா, மணி சந்திராவுடன் ஜோடி போட்டு டான்ஸ் ஆடினார். இதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து ரீல்ஸ் வீடியோவை பகிர்வது ஆட்டம் போட்டு வெளிநாட்டுக்கு செல்வதுமாக சமீபகாலமாக இருந்து வருகிறார்கள்.


இந்நிலையில் தற்போது மணி சந்திராவின் பிறந்தநாளுக்கு அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் ரவீனா தாஹா. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒருவேல இவர்கள் இருவர்களும் காதலிக்கின்றார்களோ தெரியவில்லை எனக் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement