• Oct 08 2024

கல்யாண கோலத்தில் குக் வித் கோமாளி ஜோயா.. வெட்கத்துடன் ஹனிமூன் அறிவிப்பு..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

நடிகையும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளருமான ஜோயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்யாண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை ஜோயா மலையாள திரைப்படங்களில் 20 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழிலும் சில படங்கள் நடித்துள்ளார் என்பதும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்தது.

தற்போது அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார் என்பதும் அவரது அப்பாவித்தனமான மலையாள கலந்த தமிழ் பேச்சு காரணமாக இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜோயாவுக்கு ஒன்றரை மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் சற்றுமுன் அவர் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் ’நாகேந்திரன் ஹனிமூன்’ என்ற வெப் தொடரில், தான் ரோஸி என்ற சிறிய கேரக்டரில் நடித்திருப்பதாகவும், அந்த கேரக்டரின் தோற்றம்தான் இந்த புகைப்படங்கள் என்றும் பதிவு செய்துள்ளார்..

ஜோயா கல்யாண கோலத்தில் வெட்கத்துடன் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதோ என்று அதிர்ச்சி அடைந்தோம் என்றும், தற்போது தான் நிம்மதியாக இருக்கிறது என்றும் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனாலும் திருமண கோலத்தில் ஜோயா மிகவும் அழகாக இருப்பதாகவும் அவர் இன்னும் நிறைய சீரியல்களிலும் திரைப்படங்களில் நடிக்க வாழ்த்துக்கள் என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.


Advertisement