• Jan 19 2025

வீட்டுக்கு போங்க உங்களுக்கு அடி நிச்சயம்,சுந்தர்.சியை வறுத்தெடுத்த பயில்வான் இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் சுந்தர்.சி. பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இவர் தலைநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார்.அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்,குஷ்பு இல்லையென்றால் அவரை ப்ரொபோஸ் செய்திருப்பேன் என்று பேசி இருந்தார். இது குறித்து இயக்குநர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது,நடிகர் சுந்தர் சி இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருக்கும் போதே எனக்கு தெரியும். ரொம்ப அழகாக இருப்பாரு, அமைதியான மனிதர். அவருக்கு இயக்கத்தில் பெரிய அளவு கிரியேட்டிவிட்டி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. 


உள்ளத்தை அள்ளித்தா படத்தில், ரம்பாவின் தொடையை காட்டினார். படம் ஏற்றம் பெற்றது. ரம்பாவின் தொடையால் முன்னுக்கு வந்தவர் யார் என்றால் அது சுந்தர் சி தான்.தற்போது, சுந்தர் சி பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், செய்தியாளர் ஒருவர் குஷ்புவை திருமணம் செய்வதற்கு முன் யாரையாவது காதலித்து இருக்கீங்களா என்று கேட்டுள்ளார். 

அதற்கு ஆமாம், பொன்னுமணி படத்தில் நடித்த நடிகை சௌந்தர்யாவை நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். அதற்குள் என் வாழ்க்கையில் குஷ்பு வந்தால் அவர்களை திருமணம் செய்து கொண்டேன்.


இந்த விஷயத்தை உங்களிடம் மட்டுமில்ல, குஷ்புவிடமும் பல முறை சொல்லி இருக்கிறேன். நீ மட்டும் என்னை திருமணம் செய்யவில்லை என்றால் எப்படியாவது சௌந்தர்யாவிடம் என் காதலை சொல்லி திருமணம் செய்து இருப்பேன் என்று சொன்னேன். எல்லாத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த அவங்க, நீ டைரக்ஷன் பண்ற படத்துல அவங்கல நடிக்க வைக்கக்கூடாது என்று சத்தியம் வாங்கிவிட்டார்கள் என்று சுந்தர் சி பேசி இருக்கிறார். 

மனைவியின் கண்முன்னே, திருமணத்திற்கு முன்பு நடிகையை காதலித்தேன் என்று சொல்லும் அளவிற்கு உங்களுக்கு துளிர் விட்டு போச்சா, வீட்டுக்கு போங்க, குஷ்புவிடம் அடி நிச்சயம் இருக்கு என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement