விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொ்ணடிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.
இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் ப்ரியா காவியாவிடம் சாப்பிட்டியா எனக் கேட்க, காவியா இல்லை எனக் கூற, இந்த வீட்டில் உன்னை சாப்பிடக் கேட்க கூட யாரும் இல்லையா..? எனக் கூறி காவியாவை சாப்பிட அழைத்துக் கொண்டு போய் பார்த்திக்கு பக்கத்தில் அமர வைக்கிறார் ப்ரியா.
காவியா பக்கத்தில் அமர்ந்ததும் பார்த்தி கோபத்தில் எழும்புகின்றார். உடனே ப்ரியா "பார்த்தி ஒரு நிமிஷம் காவியா வயிற்றில் இருந்த குழந்தை கலைந்து போனதுக்கு காரணம் காவியா மட்டும் தான் என்று நினைக்கிறீங்களா..? நிச்சயமாக இல்லை, அவளை மனைவியாக இல்ல ஒரு மனுஷியாக மதித்திருந்தால் கூட இன்றைக்கு அவ நல்ல முறையில் அந்தக் குழந்தைகளை பெற்று எடுத்திருப்பா.
நீங்க காவியாவை குறை சொல்லிட்டு இருந்தீங்களே தவிர அவ மனசில் உள்ள குறையை என்ன என்று கேட்கவே இல்லை, காவியாக்கு நா அக்கா மட்டும் இல்லை, அவளைத் தூக்கி வளர்த்த இன்னொரு அம்மாவும் கூட, காவியா நீ கவலைப்படாதே, உனக்கு நான் இருக்கேன்" என்கிறார்.
இதனையடுத்து காவியா ஓடிவந்து ப்ரியாவை கட்டியணைத்து கண்ணீர் வடிக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.
Listen News!