• Apr 27 2024

வாரிசு ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட யோகி பாபு- கூலாக போஸ் கொடுத்த தளபதி விஜய்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 11-ம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இப்படத்தில் சரத்குமார், ஷாம், ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். 

இப்படம் வெளியாகி 11 நாட்களில் உலகமெங்கும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையை படைத்தது.வாரிசு படத்தின் படப்பிடிப்பின் போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.


தற்போது விஜய் வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் Buggy ஓட்டும் வீடியோவை யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.மேலும் இதனைத் தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்கவுள்ளார்.இந்தப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் வெளியான தகவல் இணையத்தை கலக்கி வருகிறது.

விஜய், லோகேஷ் கூட்டணியில் வெளியான 'மாஸ்டர்' படம் சில நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. அதையெல்லாம் சரிக்கட்டி 'தளபதி 67' ழுழுக்க தன்னுடைய பாணியில் இருக்க போவதாக லோகேஷ் பேட்டிகளில் கூறி வருகிறார். மேலும் லோகேஷின் முந்தைய நடிகர்கள் கூடும் எல்யூசி இந்தப்படத்திலும் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement