• Apr 27 2024

புத்தம் புது மாடலில் புதிய கார் வாங்கிய யாஷிகா ஆனந்த்- இத்தனை லட்சம் பெறுமதி வாய்ந்ததா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருபவர் தான் யாஷிகா ஆனந்த். இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் எனலாம். இந்த நிகழ்ச்சியில் சீசன் 2இல் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்.

அத்தோடு இந்த நிகழ்ச்சியில் நடிகர் மகத்துடன் காதல் வயப்பட்டு சர்ச்சையில் சிக்கினார்.தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரிய கார் விபத்தில் சிக்கினார்.


 அவர் வேகமாக கார் ஓட்டி சென்று மோதியதில் உடன் பயணித்த தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.யாஷிகாவுக்கும் பலத்த காயம் மற்றும் பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்ட நிலையில் அதற்காக மாதக்கணக்கில் சிகிச்சை பெற்று தற்போது தான் குணமடைந்து இருக்கிறார். 


பல மாதங்கள் அவர் படுத்த படுக்கையாக இருந்தார்.இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் ஒரு புது கார் வாங்கி இருக்கிறார். புத்தாண்டு ஸ்பெஷலாக அவர் இதை வாங்கி இருக்கிறார்.அவர் வாங்கிய Volkswagen Virtus காரின் டாப் எண்டு மாடல் விலை சுமார் 22.5 லட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  



Advertisement

Advertisement

Advertisement