• May 18 2024

சன்டிவியில் அடுத்து இந்த ஜோடிக்கு கல்யாணமா ? வெளியான புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.அந்தவகையில் கலர்ஸ் தமிழில் “இதயத்தை திருடாதே” சீரியலில் ஹீரோயினாக சின்னத்திரையில் அறிமுகமானர் ஹேமா பிந்து. 

மேலும் அதில் ”சஹானா” என்ற பெயரில் தனது அசத்தலான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பெற்றார்.இதன் பின்னர் இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் சிறிது நாட்கள் சின்னத்திரைக்கு வராமல் இருந்தார்.

இவ்வாறுஇருக்கையில்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ”இலக்கியா” என்ற புதிய சீரியலில் கமிட்டாகி நடித்து வருகிறார். 

மேலும்  இவருக்கு ஹீரோவாக சித்தி 2 சீரியலின் ஹீரோ கெளதம் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஹேமா ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து புத்திசாலி பெண்ணாக நடித்து வருகிறார். மேலும் இலக்கியாவின் திறமை மற்றும் நல்ல குணத்தை பார்த்து கௌதமுக்கு இவர் மீது காதல் மலர்கிறது.


இவவ்வாறுஇருக்கையில்  இலக்கியாவின் அத்தை மகள் இவருக்கு கிடைக்கும் நல்ல வாழ்க்கையை தட்டி பறிக்க பல சூழ்ச்சிகளை செய்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியல் குறித்து அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் இலக்கியா மற்றும் கௌதம் இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது அடுத்த எபிசோடில் இருவருக்கும் திருமணம் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


Advertisement

Advertisement