• May 18 2024

லியோ திரைப்படம் முதல் நாளில் இத்தனை கோடி வசூல் செய்யுமா?- இது தான் முதல் முறையா?

stella / 7 months ago

Advertisement

Listen News!

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகியுள்ளது. லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி வியாழன் அன்று திரைக்கு வரவுள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தத் திரைப்படம் இதுவரை ரூ. 434 கோடி வரை பிஸ்னஸ் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.


அதில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 100 கோடி வரை திரையரங்க உரிமை விற்பனை செய்துள்ளார்களாம்.இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் தமிழகத்தில் ரூ. 100 கோடிக்கு விற்பனை ஆனதில்லை. இதுவே முதல் முறையாகும் என்கின்றனர். மேலும் லியோ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் மட்டுமே ரூ. 13 கோடியை தாண்டியுள்ளது என கூறப்படுகிறது.


இதனால் உலகளவில் முதல் நாள் மட்டுமே இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என படக்குழு எதிர்பார்க்கிறார்களாம்.இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement