• Jul 03 2025

ஜாமீன் கிடைக்குமா.? – ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு..!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா தாக்கல் செய்த ஜாமீன் மனு குறித்த விசாரணையின் தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த தீர்ப்பு மேலும் பல பரபரப்புகளுக்கு வழிவகுக்கின்றது.


போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, கடந்த வாரம் தங்களது சட்டத்தரணி முன்னிலையில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவின் விசாரணை தற்பொழுது நடைபெற்றதுடன் அதன் தீர்ப்பினை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


இந்த வழக்கின் முக்கியமான முடிவு இன்று மாலை வெளியாகும் எனவும் சில தகவல்கள் கூறுகின்றன. அதன் போது, வெளியாகும் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும் என ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement