• May 13 2024

விக்கி - நயன் திருமண நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பு-இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2015இல் இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார் .இதில் விஜய் சேதுபதியுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார் , இதைத்தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாராக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது , இந்த அழகிய நட்பு காதலாக மாறி 7 வருடங்கள் கடந்து இன்று திருமணத்தில் முடிந்துள்ளது.

இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்யும் இவர்கள் மகாபலிபுரத்திலுள்ள நட்சத்திர ஹோட்டலில் பெரிய செட் அமைத்து மிக பிரமாண்டமான அளவில் இந்து முறைப்படி தாலி கட்டி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நயன்தாரா மற்றும் விக்கியின் விதவிதமான போட்டோக்கள் பிரிண்ட் செய்து குடிநீர், பாட்டில்கள் வழங்கப்பட போட்டோக்கள் வெளியாகி செம ட்ரெண்ட் ஆகின..

இந்நிலையில் இவர்களது .திருமணத்துக்காக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.இதையொட்டி திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் விருந்தினர் அனைவருக்கும் திருமணத்திற்கு முன்பு ஒரு கோர்ட் அனுப்பி வைக்கப்படுமாம்.

அந்த கோர்டை காண்பித்தால் தான் ரிசார்ட்டுக்குள் நுழைய முடியுமாம்.மேலும் திருமணத்திற்கு வருபவர்கள் அனைவருக்கும் ட்ரெஸ் கோடும் உண்டாம். அதாவது அனைவரும் ஒரே நிறத்தில் தான் அணிய வேண்டுமாம், என்று விக்னேஷ் சிவனுக்கு நெருக்கமாக ஒருவர் தெரிவித்தார்.

குறிப்பாக திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் கொண்டுவர கூடாது, போட்டோ எடுக்க கூடாது போன்றன இவற்றில் முக்கியமாக உள்ளததாம், ஏனெனில் திருமணத்தை படம் ஆக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளதால் திருமணம் குறித்த வீடியோ எதுவும் லீக் ஆகிவிடக்கூடாது என்பதன் காரணமாக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த திருமணத்திற்கு வருகை தந்த காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement