அஜித் குமார் நடிப்பில் நேற்றைய தினம் ரிலீஸ் ஆன படம் தான் விடாமுயற்சி. இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் படம் வெளியானதில் அவருடைய ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் இந்த படத்தை வரவேற்றுள்ளனர்.
அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் விடாமுயற்சி. இது கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் வழமையான அஜித் படங்களை போல் அல்லாமல் இருப்பதனால் ரசிகர்கள் பெரும் வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
தமிழ் சினிமாவில் அஜித்துக்கு போட்டியாக விஜய் நடிக்கும் படங்கள் காணப்படுகின்றன. ஆனால் அஜித்தும் விஜய்யும் சிறந்த நண்பர்களாகவே காணப்படுகின்றனர். அவர்களுடைய ரசிகர்கள் தான் அடிக்கடி மோதிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படம் வெளியான போது அஜித், விஜய் ரசிகர்கள் செய்த நல்ல விஷயமும் குளறுபடி விஷயமும் தற்போது இணைய பக்கத்தில் வைரலாகி உள்ளன.
அதாவது விடாமுயற்சி படம் வெளியான போது அஜித், விஜயின் ரசிகர்கள் இணைந்து ஆறு மாத குழந்தை உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு செயலை செய்துள்ளனர். குறித்த குழந்தையின் முதுகில் தசைநார் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த குழந்தையை மீட்டெடுக்க 16 கோடிகள் செலவாகும் என தெரிவித்துள்ளனர். இதற்காக குழந்தையின் மருத்துவ செலவிற்கு நிதி திரட்ட தங்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர்.
இன்னொரு பக்கம் விஜய் உடைய ரசிகர்கள் அங்கு தமிழக வெற்றி கழகத்தின் கொடியுடன் தியேட்டரில் புகுந்ததால் அங்கிருந்த அஜித் ரசிகர்கள் அவர்களை அடித்து விரட்டிய வீடியோ காட்சியும் தீயாய் பரவி இருந்தது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!