விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து ஒளிபரப்பாகி வருகின்றது. எனினும் இந்த சீரியல் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைவள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடிப்பவர் தான் சதீஷ். இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்த போதும் அவருக்கு பிரபலத்தை தேடி கொடுத்த சீரியலாக பாக்கியலட்சுமி சீரியல் காணப்படுகின்றது. மேலும் இது தொடர்பான பல அப்டேட்டுகளை தொடர்ச்சியாகவே தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருவார்.
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா கோபியை விவாகரத்து பண்ணுவதற்காக டிவோஸ் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாத குழப்பத்தில் கோபி திணறிப் போய் உள்ளார். எனவே இனிவரும் நாட்களில் கோபி ராதிகாவுக்கு விவாகரத்து கொடுப்பாரா? மீண்டும் பாக்கியலட்சுமி உடன் இணைந்து வாழ துடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபி தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ராதிகா வீடும் இல்லை பாக்யா வீடும் இல்லை.. வீடே இல்லாமல் தவிக்கின்றேன் என நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார்.
தற்போது இவருடைய பதிவு காமெடியாக இருந்தாலும் உங்களுக்கு இரண்டு பொண்டாட்டி தேவையா? இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க? என தாறுமாறாக கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.
Listen News!