• May 29 2023

என்னாச்சு..? உடல் முழுவதும் டாட்டூஸ்.. கலரிங் முடி.. குஷ்பூ மகளின் லேட்டஸ் போட்டோ..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை குஷ்பூவின் மகள்கள் அவந்திகா மற்றும் அனந்திகா இருவரும் வெளிநாட்டில் படித்து வருகின்றனர்.

இதில் ஒருவர் தயாரிப்பாளராகவும் மற்றொருவர் நடிகையாகவும் மாறவுள்ளதாகவும் அவர்களின் விருப்பப்படியே செயல்பட அவர்களுக்கு உரிமை உள்ளதாகவும் முன்னதாக குஷ்பூ ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் அவர்களில் அவந்திகா தொடர்ந்து கவர்ச்சித் தூக்கலான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

அவர் டாட்டூ பிரியை என்பது அவரது இந்தப் புகைப்படங்கள் மூலம் தெரிகிறது. உடல் முழுவதும் அதிகமான இடங்களில் இவர் டாட்டூ போட்டுள்ளார். மார்பகம், தோள்பட்டை, தொடை போன்ற பகுதிகளில் இவர் டாட்டூ பதித்துள்ளார். கைகளிலும் மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களிலும் டாட்டூக்கள் காணப்படுகின்றன. இதேபோல தலைமுடியையும் வித்தியாசமாக பச்சை நிறத்தில் கலரிங் செய்துள்ளார். 

இதன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவந்திகா, தான் மிகவும் க்யூட்டாக உணர்வதாக தெரிவித்துள்ளார். முன்னதாக கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனங்களை வாங்கிய அவந்திகா, தற்போது மீண்டும் கவர்ச்சியாகவே புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தில் கமெண்ட் செய்துள்ள அவந்திகாவின் அம்மா, நடிகை குஷ்பூ, என்னுடைய க்யூட்டி என்று உற்சாகம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தப் புகைப்படத்தில் வழக்கமான அவரது புன்னகை மிஸ்ஸிங் என்றும் கமெண்ட்ஸ் எழுந்துள்ளது. அவர சோகத்திற்கு என்ன காரணம் என்று ஒருவர் கேட்டுள்ளார். சிரிக்காமல் இருப்பதும் ஒருவித அழகுதான் என்று அவந்திகா நினைத்துவிட்டாரோ என்னவோ.

தற்போது வெளிநாட்டில் நடிப்பிற்கான படிப்பை படித்து வருகிறார் அவந்திகா. இந்த படிப்பை முடித்துவிட்டு அவர், தமிழ் சினிமாவில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் தனது சொந்த முயற்சியில்தான் முன்னேற வேண்டும் என்று முன்னதாக குஷ்பூ தெரிவித்துள்ள நிலையில், அவந்திகாவை வைத்து சுந்தர் சி படமியக்கி, தயாரிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எதுவாக இருந்த போதிலும் சில காலங்களில் தெரியவந்துவிடும்.


Advertisement

Advertisement

Advertisement