• Apr 27 2024

என்னாச்சு... நடு ராத்திரியில் அட்லீ வீட்டுக்கு சென்ற ஷாருக்கான்! ஓஹோ..இது தான் சம்பவமா?

Jo / 11 months ago

Advertisement

Listen News!

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அட்லீ, தற்போது பாலிவுட்டில் பிஸியாக காணப்படுகிறார். முதன்முறையாக ஷாருக்கானுடன் இணைந்த அட்லீ, ஜவான் படத்தை இயக்கி வருகிறார். ஷாருக்கான் சொந்தமாக தயாரிக்கும் இந்தப் படம் கடந்த 4 ஆண்டுகளாக உருவாகி வருகிறது.

விஜய் - அட்லீ கூட்டணியின் சக்சஸைப் பார்த்துதான் ஜவான் படத்திற்கு ஓக்கே சொன்னார் ஷாருக்கான். ஆனால், அவரே நொந்துவிடும் அளவிற்கு அட்லீ சம்பவம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் பட்ஜெட்டில் வேலையைக் காட்டிய அட்லீ, அடுத்து படப்பிடிப்பையும் ரொம்ப லேட் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் ஷாருக்கானும் தனது மகன் ஆர்யனின் போதைப் பொருள் வழக்கு, பதான் ப்ரொமோஷன் போன்றவைகளால் சரியாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லையாம். ஆனாலும், ஜூன் 2ம் தேதி வெளியாகவிருந்த ஜவான் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாம். போஸ்ட் புரொடக்‌ஷன், கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லை என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி ஆகஸ்ட் 25ம் தேதி ஜவான் திரைப்படத்தை வெளியிட ஷாருக்கான் முடிவு செய்துள்ளாராம். ஆனால், ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது குறித்து அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனை ஜவான் டீசருடன் அறிவிக்கலாம் என அட்லீ கூறியதால், ஷாருக்கானும் சம்மதம் தெரிவித்திருந்தாராம்.



அப்படி இருந்தும் ஜவான் டீசரை அட்லீ இன்னும் ரெடி செய்யவில்லையாம். இதனால், டென்ஷனான ஷாருக்கான் இரவோடு இரவாக அட்லீயின் வீட்டுக்கேச் சென்றுவிட்டாராம். ஜவான் படத்தை இயக்குவதற்காக அட்லீ கமிட் ஆனதுமே அவருக்கு மும்பையின் பந்த்ரா பகுதியில் வீடு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார் ஷாருக்கான். இந்நிலையில், ஜவான் டீசர் லேட் ஆனதால் ஷாருக்கானே நேரில் சென்று விவரம் கேட்டுள்ளார்.

மேலும், ஒருநாள் முழுவதும் அட்லீ வீட்டிலேயே ஷாருக்கான் இருந்துள்ளார். இதனால், அவசர அவசரமாக ஜவான் டீசரை ரெடி செய்துள்ளது படக்குழு. 

இதனையடுத்து உடனடியாக ஜவான் டீசர் வெளியாகும் என்றும், அதன் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இதனிடையே, ஜவான் டீசரின் ரன்னிங் டைம் உள்ளிட்ட சில தகவல்கள் சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் லீக்காகி இருந்தன. இந்த டீசர் 1.54 ரன்னிங் டைம் இருக்கும் எனவும், சென்சாரில் U/A சர்டிஃபிகேட் வழங்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறன்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement