• May 19 2024

விக்ரம் படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி செய்த விஷயம் -வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம்.

இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.விஜய் சேதுபதி ,பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ள இந்தத் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

நான்காண்டுகளுக்குப் பிறகு கமலின் திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து பல இடங்களுக்கு கமல் ப்ரமோஷன் பணிகளுக்காக செல்கிறார்.

இந்நிலையில் கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து வரும் விக்ரம் படத்திற்கு முதல் ஆளாக சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

ஆம், ரஜினியை சந்தித்துள்ள லோகேஷ் கானகராஜ் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்தோடு ரஜினி விக்ரம் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

https://twitter.com/Dir_Lokesh/status/1530799673547816960?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1530799673547816960%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Frajini-wished-vikram-movie-1653807312

Advertisement

Advertisement