• Jan 18 2025

விஜய் என்ன லாரன்ஸா..? சாய்பாபா கோயில் அவர் கட்டவே இல்லை! போலியாக நடிக்கிறாரா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆவார். இவர், தற்போது வெங்கட் பிரபு இயக்கதில் 'கோட்' படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியையும் ஆரம்பித்துள்ளார். 

எனினும் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல், 2026 ஆம் ஆண்டு நடக்கவுள்ள, சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுவோம் என்று விஜய் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து கட்சியின் உறுப்பினர் சேர்க்கை செயலி  அறிவிப்பு, கொடி அறிவிப்பு, மாவட்ட நிர்வாகிகளுக்கு இடையே பொறுப்பு அறிவிப்பு என அனைத்தும் அடுத்தடுத்து செயற்படுத்தி வருகிறார்.

இவ்வாறு தனது சினிமா வாழ்க்கை ஒருபக்கம், அரசியல் வாழ்க்கை ஒருபக்கம் என ரொம்பவும் பிசியாக இருந்து வருகிறார் விஜய்.


இந்த நிலையில், தனது அம்மாவின் ஆசைக்கு ஏற்ப சாய் பாபா கோவிலொன்றை கட்டி இருந்தார் நடிகர் விஜய். ஆனால் உண்மையிலேயே அந்த சாய்பாபா கோயிலை விஜய் கட்டவே இல்லை என வலைப்பேச்சு பிஸ்மி பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

அதன்படி, விஜய் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றக் கூடியவர். அவர் எப்படி சாய்பாபா கோயிலை கட்டமுடியும்? அவரது தந்தை கூட எல்லா கோயிலுக்கும் செல்லக் கூடியவர். அவர்கள் வாயில் முதலில் ‘ஏசப்பா காப்பாற்று’ என்றுதான் வருமாம்.  


இப்படி இருக்கும் போது அந்த கோவிலை விஜய் கட்டுவதற்கு வாய்ப்பே இல்லை. அதையும் மீறி விஜய் ஒன்னும் லாரன்ஸ் இல்லையே. லாரன்ஸ் அளவுக்கு அவர் தாய் மீது விஜய் அன்பு வைக்கவில்லை என்றும் சொல்லியுள்ளார் பிஸ்மி.

மேலும், அமெரிக்காவிலோ ஆப்பிரிக்காவிலோ கொரட்டூர்  இல்லை. இங்கு சென்னையில்தான் உள்ளது. இவ்வாறு விஜய் இத்தனை வருடங்களாக கட்டுவது நமக்கு தெரியாமல் இருக்குமா? என விளாசி உள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் சாய்பாபா கோயிலுக்கு வந்த ஷோபா இது எனக்காக என் மகன் விஜய் கட்டியது என  ஆணித்தரமாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement