• Aug 22 2025

நம்மை சீர்படுத்துவது 10% மீதி சீரழிப்பது.!சோசியல் மீடியாவின் சமுத்திரக்கனியின் கருத்து!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி  இயக்குநர் மற்றும் நடிகரா வலம் வருபவர் சமுத்திரக்கனி.  இவர் தமிழ் , தெலுங்கு மற்றும் மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். மேலும் இவர் சமூக விழிப்புணர்வு ஊட்டும் வகையில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொள்ளும் போது சோசியல் மீடியா குறித்து பேசிய கருத்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 


அவர் கூறுகையில் கொஞ்ச நாளாவது  போன் இல்லாமல் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று இருப்பதாகவும் ஒரு நாளைக்கு காலையில் அரை மணி நேரம் மட்டும் தான் பார்ப்பேன் அது சம்மந்தமாக யார் கூடயாவது பேச வேண்டும் என்றால் பேசுவதாக கூறி இருந்தார். மறுபடியும் அரை மணி நேரம் பார்த்தது விட்டு முக்கியமான விடயம் என்றால் பேசுவேன் இல்லனா விட்டு விடுவேன் என்று கூறினார்.


மேலும்  சோசியல் மீடியா ஒரு குப்பை திறந்தவெளி கழிப்பறை மாதிரி ஆகி விட்டாதாகவும் எல்லோரும் வந்து குப்பையை கொட்டி விட்டு போயிர்றாங்க அதை நாம மண்டையில் ஏற்றி கிறுக்கு ஆக்குறாங்க என்று கூறினார். தொடர்ந்து கூறும் போது சோசியல் மீடியாவில் நம்மை  சீர்படுத்துவது 10% என்பதையும் மீதி 90% நம்மை சீரழிப்பதாக  இருக்கு என்று கூறிய இருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement