• Jan 27 2023

எச்ச வேலை பார்க்கும் பிக்பாஸ்... தாறுமாறாக திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்... நடந்தது என்ன ..!

Listen News!
Prema / 1 week ago
image

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரமாண்டமாகத் தொடங்கப்பட்டது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 

இந்நிலையில் இதில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அத்தோடு இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்கள் பலரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் பிக்பாஸ் வீட்டின் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர் என்று தான் கூற வேண்டும்.


இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் தற்போது ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். இந்நிலையில் ப்ரியங்கா தேஷ்பாண்டேவும், மா.கா.பா. ஆனந்தும் வந்த ப்ரொமோ வீடியோவை இன்று காலை பிக்பாஸ் குழுவினர் வெளியிட்டார்கள். அதன் பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, உடனடியாக அதை நீக்கிவிட்டு, விஜய் டிவி சீரியல் குழுவை அழைத்து வந்த ப்ரொமோ வீடியோவை வெளியிட்டனர்.


இதனால் கடுப்பாகி ப்ரியங்கா வீடியோவை ஏன் நீக்கினீர்கள் என்று பார்வையாளர்கள் கேட்ட நிலையில் இரண்டாவது ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவிலும் ஒரு சீரியல் குழு வந்து தங்களின் சீரியல் பற்றி பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் விவரிக்கிறது. அந்த சீரியலுக்கு பெயர் சிறக்கடிக்க ஆசை. மேலும் அவர்கள் தெரிவித்ததை கேட்ட ஹவுஸ்மேட்ஸ் சீரியல் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


இவ்வாறாக வெளிவந்த ப்ரொமோ வீடியோக்களை பார்த்தவர்கள் கூறியதாவது, என்னங்கய்யா ஒரே சீரியல் ப்ரொமோஷனா போய்க்கிட்டிருக்கு. இன்னும் என்னென்ன கொடுமையை எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கோ. இதுக்கு பேரு தான் எச்ச பிக்பாஸ். இந்த சீசனே ஒழுங்காக போகவில்லை. இந்த விசித்திரத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சீரியல் ப்ரொமோஷன் வேறயா..?, வெளங்கிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.


அதுமட்டுமல்லாது பிக்பாஸ் பார்வையாளர்கள் மேலும் கூறியிருப்பதாவது "கன்டன்ட்டை எப்படி மேம்படுத்துவது என்று கடைசி வரை நீங்கள் யோசிக்கவே இல்லை. இதுக்கு பெயர் தான் கன்டன்டா பிக்பாஸ்" எனக் கேட்டுத் தாறுமாறாக திட்டித் தீர்த்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement