• Mar 05 2025

விஜயின் கார் முன் திடீரென விழுந்த கேமராமேன்...! பதற்றத்தில் தளபதி..! நடந்தது என்ன..?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

சினிமா அரசியல் என கலக்கி வரும் தளபதி விஜய் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் கூட்டத்தினை தன் வசமாக்கியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனும் பெயரில் ஒரு கட்சியினை ஆரம்பித்து மக்களிற்கு பல தொண்டுகளை செய்து வருகின்றார்.


நடிப்பில் இருந்து விலகுகின்றார் என ரசிகர்கள் ஒரு பக்கம் கவலையில் இருந்தாலும் இவர் அரசியலில் இணைந்து சேவையாற்றுவதை எண்ணி மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். எப்பொழுதும் விஜயின் வருகைக்காக அவரது வீட்டு வாசலில் காத்திருக்கும் ரசிகர்கள் இன்றும் அதிக கூட்டம் தளபதியின் வருகைக்காக காத்திருந்தது.


இந்நிலையில் கட்சியின் கூட்டம் ஒன்றிற்கு விஜய் தனது வீட்டிலிருந்து காரில் வெளியே வந்ததும் அவரை பார்ப்பதற்காக சென்ற கேமராமேன் ஒருவர் கால் தடக்கி விஜயின் காரின் முன் விழுந்துள்ளார்.இதனை பார்த்த விஜய் பதறியடித்து காரை விட்டு இறங்கி ரசிகர்களுடன் சேர்ந்து நடந்து தனது கட்சி அலுவலகத்திற்குள் சென்றுள்ளார்.குறித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது .

Advertisement

Advertisement