• May 29 2023

'மனதை என்னமோ செய்கிறது'.. மாமன்னன் குறித்து நடிகர் சூரியின் வைரல் பதிவு இதோ!

Jo / 1 week ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் First லுக் போஸ்டர் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் முதல் பாடல் ராசா கண்ணு சமீபத்தில் வெளிவந்தது. இப்பாடலை வடிவேலு பாடியிருந்தார். இந்நிலையில், இப்பாடல் குறித்து பிரபல நடிகர் சூரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் 'தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன், மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல். மாமன்னன் படக்குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்' என கூறியுள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement