• Jan 19 2025

நெல்லையில் நடிகர் விஜய் ரசிகர்கள் செய்த காரியம்! பெண்கள் உட்பட ஆறு பேருக்கு பலத்த காயம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய், தனது 68வது திரைப்பட பணிகளுக்காக ஹைதராபாத்தில் நடித்து வந்த நிலையில், சில  தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். 

தற்போது, தூத்துக்குடி - நெல்லை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார்.

கடந்த காலத்தில் மாணவர்களை சந்தித்து விருதுகளை வழங்கிய விஜய் தற்போது நெல்லையில் வெள்ளத்தால் பாதித்த மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை அளித்துள்ளார். 

இந்த நிலையில், நெல்லையில் நிவாரணம் வழங்கிய நடிகர் விஜயை பார்க்கச் சென்று ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

அதன்படி, நெல்லையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய விஜய், நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது அவரை காண ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், நடிகர் விஜயை காண முயன்ற இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement