• Jan 19 2025

கேட்காமலே அள்ளிகொடுப்பவர் கேப்டன்... வாழ்ந்தவரை நல்லவராக வாழ்ந்தவர்... நடிகர் வையாபுரி கண்ணீர் பேட்டி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

புரட்சி தலைவர் ,  நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். எம்ஜிஆர் மற்றும் கலைஞர் இவர்களின் மீதுள்ள பற்றின் காரணமாக அவர்களின் பெயர்களின் பாதிப் பெயரை எடுத்து புரட்சிக்கலைஞர் என வைத்துக் கொண்டார். ஏழைகளின் இளவரசன் என்று அழைக்கப்படும் இவரின் கையால் தர்மம் வேண்டாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தர்மம் செய்தவர் . 


விஜயகாந்தைப் பற்றி நடிகர் வையாபுரி பல தகவல்களை கூறினார். வையாபுரி கல்யாணத்திற்க்கு வந்து தாலி எடுத்துக் கொடுத்தாராம் விஜயகாந்த். அதுமட்டுமில்லாமல் தேர்தலில் விஜயகாந்த் ஜெயித்ததும் அவரை பார்க்க வையாபுரி குடும்பத்தோடு சென்றாராம். அதற்கு விஜயகாந்த் ஜெயலலிதாவை சந்தித்து விட்டாயா? என்று கேட்டாராம். இல்லை முதலில் உங்களை சந்தித்த பிறகு போகலாம் என இருக்கிறேன் என்று சொல்ல அதற்கு விஜயகாந்த் இல்ல இல்ல முதலில் ஜெயலலிதாவை சந்தித்து விட்டு என்னை வந்துப் பார் என்று சொல்லி அனுப்பிவைத்தாராம்.


இப்படி வாழும் வரை மற்றவர்களுக்கு நல்லவனாகவே வாழ்ந்தார் விஜயகாந்த். மேலும் வையாபுரி கள்ளழகர் படத்தில் நடித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் மிகவும் பீக்கில் இருந்தவர் வையாபுரி. அந்தப் படத்தின் ஒரு பாடலை மூன்று நாள்கள் படமாக்கிக் கொண்டிருந்தார்களாம்.மறு நாள் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் சூட்டிங்கும் நடந்ததாம். அதிலும் வையாபுரி நடிக்க உடனே விஜயகாந்த் ‘இந்தப் படத்திற்கான சூட்டிங் முடிய லேட் ஆகும். ஆகவே நீ முதலில் அந்தப் படப்பிடிப்பை முடித்து விட்டு வா ’ என சொல்லி ஒரு காரில் அனுப்பி வைத்தாராம் என்று வையாபுரி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement