• Jan 18 2025

மழையில் சிக்கிய பிரபலங்கள்... கவனமா இருங்கள் மக்களே... வீடியோ வெளியிட்ட சினிமா பிரபலங்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சென்னை முழுவதும் இப்போ புயலால் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கு. தொடர்ந்து பெய்து வரும் மழையால் எங்க பார்த்தாலும் வெள்ளம் நிரம்பி இருக்கு இதனால் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டதோட நடிகை ரச்சிதா உட்பட சில பிரபலங்களும் தங்கள் வீட்டுக்கிட்ட இருக்குற சூழ்நிலையை விடீயோவா பதிவு செஞ்சி இருக்காங்க. 


சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்துகொண்டு இருக்கு இதனால் எல்லா இடங்களிலும் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால நிறைய மக்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்க. இந்நிலையில் சின்னத்திரை நடிகை ரச்சிதா தனது டுவிட்டர் பக்கத்தில் தனது வீட்டு மாடியில் இருந்து வெள்ளம் தனது வீட்டை சூழ்ந்து இருப்பதை விடியோவாக பதிவு செய்து இன்சராகிராமில் பதிவிட்டுள்ளார். 


அடுத்ததாக விஜே ரக்சன் அவர் வீட்டுக்கு முன்னால வெள்ளம் புகுந்துள்ள வீடியோ எடுத்து அதை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த மழைவெள்ளத்தில் காகிதத்தில் கப்பல் செய்து விளையாடுவது போன்ற விடீயோவை பதிவிட்டுள்ளார்.


அடுத்து நட்சத்திரா நாகேஷ் அவர்களும் எல்லாரும் கவனமா இருங்க இந்த மழை அதிகமாக இருக்கு வெளிய போகாதீங்க அப்டினு ஒரு புகைப்படத்தை போட்டு இந்த மெசேஜை போட்டு இருக்காங்க. அடுத்து  நடிகை பவித்ரா லட்சுமி அவர்களும் முடிந்த அளவுக்கு கவனமா இருங்க , மிருகங்கள் வைத்து இருந்ததா அதையும் பத்திரமா பாத்துக்கோங்க என்று போஸ்ட் செய்துள்ளார். 


அதனை தொடர்ந்து பிக் பாஸ் பிராவோ அவர்களும் எல்லாரும் கவனமா இருங்க, ரோட்ல போகும் பொது பார்த்து போங்க, அவசர அழைப்புகளுக்கு கால் பண்ணுங்க என்று ஒரு விசியத்தையும் சொல்லி இருக்காரு. புயல், மழை ,வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக இருக்கு அதுனால எல்லாரும் கவனமா இருங்க.


 

Advertisement

Advertisement