• Apr 28 2024

மயில்சாமியை சொர்க்கத்திற்கு கூப்பிடும் விவேக்.. இணையத்தில் படு வைரலாகும் மீம்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகர் மயில்சாமி. இவர் சுமார் 100இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்.


இவரின் மறைவு சினிமா பிரபலங்களுக்கு மட்டுமல்லாது சினிமா ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. மேலும் நடிகர் மயில்சாமி, மறைந்த நடிகர் விவேக்கிற்கு மிகவும் நெருக்கமான நண்பராவார். அதுமட்டுமல்லாது அவருடன் பல படங்களில் இணைந்தும் பணியாற்றி இருக்கிறார்.


இந்நிலையில், தூள் படத்தில் விவேக், மயில்சாமியின் காட்சிகளை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் ஒரு மீம்ஸ்-ஐ பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள். அதாவது சொர்க்கத்தில் விவேக் இருந்து கொண்டு, மயில்சாமியை கூப்பிடுவது போன்று அந்த மீம்ஸ் அமைந்திருக்கின்றது. இதுகுறித்த அந்தப் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement