• Apr 27 2024

பிக் பாஸ் பாவனியை வெளுத்து வாங்கிய விக்ரமன்- இவரு ரியலாவே இப்படித்தானா?- பாராட்டி வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்தாண்டு அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 22ம் தேதியோடு முடிவுக்கு வந்தது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனின் இறுதியில் ஷிவின், விக்ரமன், அசீம் மூவர் மட்டுமே இறுதிப் போட்டிக்கான மேடையில் ஏறினர். அதிலும் முதல் ஆளாக ஷிவின் வெளியேற்றப்பட அசீம் - விக்ரமன் இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்ற போட்டி வந்தது. 

 இதில் அதிகமான ரசிகர்களின் ஆதரவோடு விக்ரமன் தான் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அசீம் தான் வெற்றியாளர் என அறிவித்தார் கமல். இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இந்த சீசனில் கண்ணியமாகவும் நேர்மையாகவும் விளையாடிய விக்ரமன் அறம் வெல்லும் என்ற ஹேஷ்டேக்கில் மக்களிடம் ட்ரெண்ட் ஆனார்.


பிக் பாஸ் வீட்டில் இருந்ததைப் போலவே சொந்த வாழ்க்கையிலும் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர் விக்ரமன். அதனால் நியாயமான விசயங்களுக்காக தேவையான இடங்களில் மற்றவர்களுடன் மோதலில் ஈடுபட்டு வரும் விக்ரமன், பிக் பாஸ் பாவனியையும் வெளுத்து வாங்கியுள்ளார். 

பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்ற பாவனி தற்போது துணிவு படத்தில் அஜித்துடன் நடித்து ரொம்பவே பிரபலமாகிவிட்டார்.சின்ன தம்பி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் பாவனி. அதேபோல் EMI தவணை முறையில் வாழ்க்கை என்ற சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானார். இந்த சீரியலில் விக்ரமனும் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். 


EMI தவணை முறையில் வாழ்க்கை என்ற சீரியலில் வில்லியாக நடித்த பாவனி, ஒரு காட்சியில் பெரியவர் ஒருவரை மரியாதை குறைவாக பேசுவார். அதாவது பெரியவர் ஒருவர் பாவனிக்கு காபி கொடுக்க வரும் போது அது அவரின் காலில் கொட்டிவிடும். இதனால் கோபமாகும் பாவனி அதனை துடைத்துவிடுமாறு பெரியவருக்கு கட்டளையிடுவார். அப்போது அந்த சீனில் வரும் விக்ரமன், "உன் அப்பா வயசு இருக்கும் மனுசனை ஷூ துடைக்க சொல்ற கன்னத்தில் அடிக்க போவார். அதன்பிறகு உன்னை அடிச்சா அது எனக்கு தான் அசிங்கம்" என பாவனியை கடந்து செல்வார். 

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சீரியல், ரியல் லைஃப், பிக் பாஸ் வீடு என எல்லா இடங்களிலும் விக்ரமன் ஒரே மாதிரி தான் இருக்கிறார் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement