• Aug 31 2024

ஒரே படத்தில் விக்ரம் - தனுஷ்.. யார் ஹீரோ? யார் வில்லன்? இன்னும் 2 பிரபலங்கள்.. இயக்குனரின் மாஸ் திட்டம்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் விக்ரம் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாகவும் இதில் ஒருவர் ஹீரோவாகவும் இன்னொருவர் வில்லனாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதில் தான் முதலில் சல்மான் கான் மற்றும் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதன் பின்னர் சல்மான் கான் மற்றும் கமல்ஹாசன் நடித்த இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவல் படி அட்லி படத்தில் சல்மான் கான் நடிக்கவில்லை என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது விக்ரம் மற்றும் தனுஷிடம் அட்லி பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் இருவரும் அட்லி படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.



இதில் ஒருவர் கேரக்டர் ஹீரோ என்றும் இன்னொருவர் கேரக்டர் வில்லன் என்றும் அநேகமாக தனுஷ் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இந்த படத்தில் பகத் பாசில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் மேலும் ஷாருக்கான் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் அட்லியின் அடுத்த திரைப்படத்தில் விக்ரம், தனுஷ், பகத் பாசில், ஷாருக்கான் ஆகிய நான்கு பிரபலங்கள் இணைந்துள்ளதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement