• May 05 2026

திரைக்கு வரும் விக்ரம் ,ஐஸ்வர்யா ராய் காம்போ! இதிலாவது இணைவார்களா நந்தினி , கரிகாலன்

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

பல இயக்குனர்கள் ஹிட் கொடுப்பதற்காகவும் , நல்ல வசூல் செய்வதற்காகவும்  திரைப்படங்களை எடுப்பது வழக்கமான ஒன்றே ஆகும். ஆனால் காலத்தால் அழியாத  கவியதிரைப்படங்களை கொடுப்பதில் பெயர்போனவர் இயக்குனர் மணிரத்னம் ஆவார்.


இவ்வாறு இவரது இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியான ராவணன் திரைப்படம் ரீரிலீஸ் ஆக உள்ளது. குறித்த படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராயும் , வில்லனாக பிரித்திவிராஜும் நடித்திருந்தனர். மேலும் இவர்களுடன் இணைந்து பிரபு , கார்த்திக் , பிரியாமணி என பல முன்னணி நடிகர்கள் நடித்த இந்த திரைப்படம் ரீரிலீஸ் ஆக உள்ளது.


சமீபத்தில் பழைய திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆகுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ள நிலையிலேயே இராவணன் திரைப்படமும் நாளைய தினம் திரைக்கு வர உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த பொன்னியின் செல்வன் பெரிய அளவில் வெற்றியாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement