• May 19 2024

சூர்யாவிற்கு வில்லனாகும் விஜய்... இணையவுள்ள மாஸ் கூட்டணி... எகிறும் எதிர்பார்ப்புக்கள்..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இருவரும் சில மாதங்களாக தங்கள் காதலை வெளிப்படையாக உறுதி செய்யாமல் இருந்து வந்தனர்.

அந்தவகையில் தமன்னா விஜய் வர்மாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் பரவின. ஆரம்பத்தில் இந்த விவகாரத்தில் மௌனம் சாதித்த இருவரும் பின்னர் அது உண்மை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.


இந்நிலையில் தற்போது கங்குவா படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்ற சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் அவரின் 43-ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். இதில் யார் யார் நடிக்கவுள்ளார்கள் என்ற தகவலும் அடிக்கடி இணையத்தில் கசிந்த வண்ணம் தான் இருக்கின்றது.


அந்தவகையில் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க தமன்னாவின் காதலரான விஜய் வர்மாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மென்மேலும் அதிகரித்துள்ளது.


Advertisement

Advertisement