• Jan 19 2025

விஜயகாந்தின் தம்பிக்கு இப்படியொரு நிலையா? மதுரையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் அவலம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா வரலாற்றில் இருந்து அழிக்கமுடியாத மாபெரும் நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன் ஆகிய படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அரசியலில் களமிறங்கிய பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

எனினும், கடந்த 28ம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார். இவரது மறைவு இன்றளவில் பேசுபொருளாகவே காணப்படுகிறது. தொடர்ந்தும் பிரபலங்கள் உட்பட பலர் தமது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், மறைந்த நடிகர் விஜகாந்த்தின் தம்பி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் விஜயகாந்த் உடன் பிறந்தவர்கள் 11 பேர். அவரது அப்பாவுக்கு 6 ஆண் குழந்தைகள் மற்றும் 6 பெண் குழந்தைகள். விஜயகாந்த் சென்னையில் செட்டில் ஆன நிலையில், மற்றவர்களும் பல்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.


மதுரையில் இருக்கும் பூர்வீக வீட்டில் தற்போது விஜயகாந்தின் தம்பிகள் பால்ராஜ் மற்றும் செல்வராஜ் இருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

நடிகர் விஜயகாந்தின் தம்பி செல்வராஜ் அங்கு மதுரையில் பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறாராம். விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு தனது பூர்வீக வீட்டுக்கு செல்வதை குறைத்துக்கொண்டாராம் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement