தற்போது சென்சேஷனன் நடிகையாக கலக்கி வரும் நடிகை பிரியா பிரகாஷ் வாரியார் இவர் சமீபத்தில் வெளியாகிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதனை தொடர்ந்து தற்போது வெற்றி நடைபோட்டு வரும் குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன் ஆடிய "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா " பாடலை ரீ கிரியேட் பண்ணி ட்ரெண்ட் ஆகியுள்ளார்.
எங்கு போனாலும் அந்த பாடலை ரீல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மேடை ஒன்றில் விஜய் பிரகாஷ் வாரியருடன் கதைப்பது போன்ற வீடியோ ஒன்றினை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் ஒழுங்குபடுத்தியுள்ளனர். இதை பார்த்த நடிகை அதிர்ச்சியடைந்துள்ளார்.
குறித்த வீடியோவில் இவரை பார்த்து விஜய் ""குட் பேட் அக்லி " செமையா பண்ணிடீங்க சிம்ரன் ஓட ஆல் டைம் பெஸ்ட்ல இன்னொரு பாட்டு இருக்கு அந்த பாட்டுக்கு STEP போட்டு காமீங்களேன்.." என கூறியுள்ளார். உடனே தொகுப்பாளர் இந்த வீடியோ ai வீடியோ என கூறி அவரை frank செய்துள்ளனர்.
Listen News!