• Sep 28 2024

’மகாராஜா’ வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி தவறான முடிவை எடுத்தாரா? எல்லாம் பணம் தான் காரணம்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சேதுபதி நடித்த ’மகாராஜா’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் ஐந்து நாட்களில் இந்த படம் 40 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து விஜய் சேதுபதி மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் என்பதும் அதுவும் 50 வது படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதில் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் எல்லாம் விரைவாக ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் அடுத்தடுத்து அவருக்கு வெற்றிகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள ’காந்தி டாக்ஸ்’ என்ற படத்தையும் ’விடுதலை 2’ படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’மகாராஜா’ என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த விஜய் சேதுபதி அடுத்ததாக ஒரு பெரிய இயக்குனர் அல்லது பெரிய நிறுவனத்தின் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால் அவர் திடீரென ஹாட் ஸ்டாருக்காக ஒரு வெப் தொடரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவான ’கடைசி விவசாயி’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த நிலையில் அவருடைய இயக்கத்தில் தான் மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிப்பதாகவும் இந்த தொடருக்கு ’விண்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.  டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாருக்காக இந்த வெப் தொடர் தயாராகும் நிலையில் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஹிட் வெற்றி படத்தை கொடுத்த விஜய் சேதுபதி, வெப் தொடரில் நடிக்க எடுத்த முடிவு தவறானது என்று கோலிவுட் திரை உலகினர் கூறினாலும் இந்த வெப் தொடரில் நடிக்க அவருக்கு திரைப்படத்தில் நடிப்பதை விட இரு மடங்கு சம்பளம் கிடைத்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement