• Jan 27 2023

துணிவு பட புரமோஷனிற்காக... மலேசியாவில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Listen News!
Prema / 3 weeks ago
image

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் தற்போது 'துணிவு' திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இப்படமானது வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் வித்தியாசமான கதையம்சத்துடன் கூடியதாக அமைந்திருக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோகேன், பிரேம், வீரா, சிபி சந்திரன், அமீர், பாவனி, ஜிபி முத்து என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தியுள்ளனர்.


பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. சமீபத்தில் இடம்பெற்ற பேட்டியில் ஒரு நல்ல படத்துக்கு புரமோஷனே தேவையில்லை என அஜித் கூறி இருந்தாலும், இப்படத்தை வாங்கி வெளியிடும் நிறுவனங்கள் புரமோஷன் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றன. 


அதிலும் குறிப்பாக இப்படத்திற்கு வெளிநாடுகளில் வேறலெவலில் புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் துபாயில் ஸ்கை டைவிங் செய்து வானில் துணிவு பட பேனரை பறக்கவிட்டு மாஸாக  வீடியோ வெளியிட்டு இருந்தனர். 

இந்நிலையில், தற்போது துணிவு படத்தை மலேசியாவில் வெளியிடும் மாலிக் ஸ்டிரீம்ஸ் என்கிற நிறுவனம், அப்படத்திற்கான புரமோஷன் பணிகளை ஏனைய படங்களின் ப்ரோமோஷனை மிஞ்சும் அளவிற்கு பிரம்மாண்டமாக செய்து வருகிறது. 


அந்த வகையில் துணிவு படத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கண்டெயினர் மற்றும் விதவிதமான சொகுசு கார்களில் மலேசியா முழுக்க படு சந்தோசமாக வலம் வந்து அங்குள்ள அஜித் ரசிகர்கள் மாஸ் காட்டி உள்ளனர். 

மேலும் இதற்கான ஏற்பாடுகளை மலேசியாவில் துணிவு படத்தை வெளியிடும் மாலிக் ஸ்டிரீம்ஸ் என்கிற நிறுவனம் தான் செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதுகுறித்த வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement