• May 05 2024

நிஜமாகவே சூரி தான் ஹீரோவா? வெற்றிமாறனுக்கு ரொம்ப தான் தைரியம்.. ‘வாடிவாசல்’ அப்டேட்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாக இருப்பதாகவாடிவாசல்என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியானது என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்ற போது இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது என்பதையும் பார்த்து வந்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் இணைந்ததால் சூர்யா இந்த படத்தில் நடிக்க தயங்கியதாகவும் ஒரு கட்டத்தில் அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து சூர்யாவுக்கு பதில் தனுஷ் நடிப்பார் என்று கூறப்பட்டாலும் தனுஷ் வரிசையாக நான்கு படங்கள் கைவசம் வைத்திருப்பதால் அதை முடித்து விட்டுவாடிவாசல்படத்திற்கு எப்போது வருவார் என்று சொல்ல முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக யோசித்த வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக நடிக்க வைத்துவாடிவாசல்படம் உருவாக்கலாம் என்று கூறப்பட்டது. இது வதந்தி என்று கூறப்பட்டாலும் தற்போது இதுதான் உண்மை என தெரிய வந்துள்ளது. ’விடுதலைபடத்திலேயே சூரியின் நடிப்பை பாராட்டிய வெற்றிமாறன், ’வாடிவாசல்படத்தின் சில முக்கிய காட்சிகளை நடிக்க சொன்னதாகவும் அதை சூரி நடித்துக் காட்டிய போது வெற்றிமாறனுக்கு முழு திருப்தி ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து சூர்யாவுக்கு பதில் சூரியை வைத்த இந்த படத்தை இயக்க அவர் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.



எனவே விரைவில் சூரி, அமீர் உள்பட முக்கிய நடிகர்கள் நடிக்கும்வாடிவாசல்படப்பிடிப்பு தொடங்கும் என்றும்விடுதலை 2’பணி முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement