• Sep 27 2023

திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த வெங்கட் பிரபு... அப்போ தளபதி 68 அப்டேட் ரெடியா..?

Jo / 1 month ago

Advertisement

Listen News!

ஆக்‌ஷன் ஜானரில் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள லியோ ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தொடங்கிவிட்டன. முன்னதாக லியோ ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே விஜய்யின் 68வது படம் குறித்த அபிஸியல் அப்டேட் வெளியானது. 

அதன்படி ஏஜிஎஸ் தயாரிக்கும் தளபதி 68 படத்தை  யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ,வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

முதன்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ள வெங்கட் பிரபு, அஜித்து மங்காத்தா ஹிட் கொடுத்ததைப் போல தளபதி 68-ஐ இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதன்படி தளபதி 68 ஷூட்டிங் அக்டோபரில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது திடீரென இயக்குநர் வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ட்வீட் போட்டுள்ளார். 

அதில், "இனிமேல் அடுத்து என்ன... நாளை (ஜூலை 30) காலை 11 மணிக்கு வெளியாகும்" என ட்வீட் செய்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், இது விஜய்யின் தளபதி 68 அப்டேட்டா என கேட்டு வருகின்றனர்.

சிலர் இது தளபதி 68 அப்டேட் தான் எனக் கூறி வரும் நிலையில், இன்னும் சிலரோ அதற்கு வாய்ப்பில்லை என கமெண்ட்ஸ் செய்துள்ளனர். வெங்கட் பிரபு கன்னட நடிகர் கிச்சா சுதீப் உடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

அதனால் வெங்கட் பிரபு - கிச்சா சுதீப் கூட்டணியில் உருவாகும் படம் பற்றிய அப்டேட்டாக இது இருக்கும் என தெரிவித்துள்ளனர்.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement