• Sep 27 2023

அர்ஜுனின் போனை களவெடுத்த வசு- சமாளிக்க முடியாமல் தவிக்கும் கோதையும் நடேசனும்- சரஸ்வதியை திட்டிய தமிழ்-Thamizhum Saraswathiyum Serial

stella / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

டைனிங் டேபிளில் இருந்து எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வசு சாப்பாடு பரிமாறுவதோடு அர்ஜுனின் போனை எடுக்க ட்ரை பண்ணுகின்றார். வசு போன் எடுக்க வேண்டும் என்பதற்காக கோதையும் நடேசனும் அர்ஜுனுக்கு கதை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் ஒரு வழியாக போனை எடுத்துக் கொண்டு வசு மேலே போகின்றார்.


வசு மேலே போனதும் கார்த்திக்கும் சென்று என்ன பண்ணுற என்று கேட்க முக்கிய வேலையாக இருப்பதாக வசு சொல்கின்றார். அப்போது குழந்தை அழ வசுவை குழந்தையை பார்க்கச் சொல்கின்றார் கார்த்திக். அப்போது கார்த்திக்கிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு வசு சொல்ல கார்த்திக்கும் பார்க்கின்றார்.

தொடர்ந்து சரஸ்வதி குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சரஸ்வதி விரதம் இருக்கப் போவதாகச் சொல்ல, தமிழ் தேவையில்லாம உடம்பைக் கெடுத்துக் கொள்ளாத என்று சொல்லி திட்டுகின்றார். சரஸ்வதி தோசை சுட்டிருக்கிறேன் சாப்பிடுங்க என்று சொல்ல கட்டித் தா னொண்டு போகின்றேன் என்று சொல்ல சரஸ்வதி கட்டிக் கொடுக்கின்றார். பின்னர் தட்டில தோசையைப் போட்டிட்டு வா என்று சொல்லி விட சரஸ்வதியும் கொண்டு வர அவரை சாப்பிட வைத்து விட்டு கிளம்புகின்றார்.


மறுபுறம் அர்ஜுன் தன்னுடைய போனில் சார்ஜ் இல்லை என்று சொல்ல கோதை தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்து சார்ஜ் போட வைக்கின்றார். மேலும் அர்ஜுனிடம் கதை கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நேரம் கடைக்குச் சென்ற அர்ஜுனின் மாமா போன் பண்ண வசு கட் பண்ணி விடுகின்றார்.

தொடர்ந்து பைக்கில் வரும் தமிழ் வழியில் ஒரு முதியவரைப் பார்த்ததும் தான் கொண்டு வந்த சாப்பாட்டை அவரிடம் கொடுத்து சாப்பிட வைக்கின்றார்.இதைப் பார்த்த நமச்சி சரஸ்வதி சாப்பாட்டை எதுக்கு கொடுத்த என்று கேட்க அவர் ரொம்ப பசியில இருக்காரு அதான் கொடுத்தேன் என்று சமாளித்து விடுகின்றார்.


தொடர்ந்து அர்ஜுனின் போன் அடித்துக் கொண்டே இருக்க அவரது அக்கா எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார். அப்போது அர்ஜுன் தனது மாமாவிடம் பேசிட்டு வைக்கின்றார். இதனால் குழப்பத்தில் இருக்கும் கோதையும் நடேசனும் வசு வந்ததும் எல்லாம் ஓகேயா என்று கேட்க ஓகே என்று சொல்கின்றார். மேலும் போன் எப்பிடி மாறிச்சு என்று கேட்ட போது வசு தானே போனை மாற்றி வைத்து சார்ஜ் போட்ட விஷயத்தைச் சொல்கின்றார்.


இதனால் கோதையும் நடேசனும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். மேலும் சரஸ்வதி தமிழுக்கு மதிய உணவு கொண்டு வந்திருப்பதோடு காலைல செய்த தோசை எப்பிடி இருந்திச்சு என்று கேட்க தமிழ் எதையோ சொல்லி சமாளித்து விடுகின்றார். இதனால் நமச்சி தமிழைத் திட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement