• Jul 27 2024

கல்யாண மண்டப சாப்பாட்டை எடுத்து முதியோர் இல்லங்களுக்கு கொடுப்போம்: தவெக புஸ்ஸி ஆனந்த்

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

தமிழக முழுவதும் கல்யாண மண்டபத்தில் மீந்து போகும் சாப்பாட்டை வாங்கி முதியோர் இல்லங்களுக்கும் சிறார் இல்லங்களுக்கும் கொடுப்போம் என்று தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

பொதுவாக கல்யாண மண்டபத்தில் 1000 பேருக்கு சமைத்து இருந்தால் அந்த கல்யாணத்திற்கு 700 அல்லது 800 பேர்கள் தான் வருவார்கள். அப்போது அந்த சாப்பாடு மீந்து போகும். அன்றைய தினம் இரவில் பாத்திரங்களை சுத்தப்படுத்த வேண்டும் என்பதற்காக மீந்து போன உணவை கல்யாண வீட்டார் குப்பை தொட்டியில் போடுவார்கள்.

ஆனால் இனிமேல் கல்யாண வீட்டில் மீந்து போகும் சாப்பாட்டை வேஸ்ட் ஆக விடமாட்டோம். தமிழகத்தில் உள்ள அனைத்து கல்யாண மண்டபத்தில் எங்களுடைய தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தொடர்பு கொண்டு, சாப்பாடு மீந்து போனால் தங்களை தொடர்பு கொண்டு கூறுங்கள் என்று சொல்வார்கள். ஒருவேளை சாப்பாடு மீந்து போய், அவர்களிடமிருந்து தகவல் வந்தால் அந்த சாப்பாட்டை நாங்கள் பார்சல் செய்து முதியோர் இல்லம் மற்றும் சிறார் இல்லங்களுக்கு வழங்குவோம்’ என்று புஸ்ஸி ஆனந்த் என்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் மூலம் பல்வேறு சமூக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதை அடுத்து பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement