• Jan 18 2025

திடீரென ரஷ்யாவுக்கு பறந்த த்ரிஷா..! சர்ச்சைகளுக்கு மத்தியில் ட்ரெண்டாகும் த்ரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் த்ரிஷா, தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கிய விடயம் தான் பேசுப் பொருளாக உள்ளது.

மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து, சூப்பராக கம்பை கொடுத்த த்ரிஷா, தற்போது தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.


இந்த நிலையில், தற்போது கமல் - மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் தான் கமிட்டாகி உள்ளதாக அவர் பதிவிட்டுள்ள இன்ஸ்டா  ஸ்டோரி வைரலாகியுள்ளது.


கடந்த இரு தினங்களாகவே த்ரிஷா பற்றிய செய்திகள் தான் அதிகம் காணப்படுகிறது. அதற்கு காரணம்,  நடிகர்கள், நடிகைகள் பற்றி ஏவி ராஜ் அவதூராக பேசியதற்கு த்ரிஷா பதிலடி கொடுத்து இருந்தார். அந்த விவகாரம் பெருசாகிய நிலையில் ஏவி ராஜ்  அதற்காக மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்த விவகாரம் ஒரு பக்கம் இருக்க, தற்போது தக் லைஃப் பட பிடிப்பில் கவனம் செலுத்திய த்ரிஷா, ரஷ்யாவில்  நடைபெற்ற தக் லைஃப் பட பிடிப்பில்  பங்கேற்றுள்ளார்.

இது பற்றி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் அப்டேட் செய்துள்ளார். அதன்படி, தக் லைஃப் ஸ்கிரிப்ட் பேப்பரையும் ஷேர் செய்துள்ளார். 



Advertisement

Advertisement