• Dec 03 2024

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு பாட்ஷா? தனுஷ் படத்தின் சோலியை முடித்த நெட்டிசன்கள்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான படம் தான் கேப்டன் மில்லர்.

இதனைத் தொடர்ந்து, தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கலாநிதிமாறன் தயாரிக்கிறார். சில நாள்களுக்கு முன்பு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து அபர்ணா பால முரளி, நித்யா மேனன், அனிகா சுரேந்திரன், சந்திப் கிஷன், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 


D50 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 19ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மேலும், அதற்கு ராயன் என பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தின் கதை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஒரு இரவு உணவகத்தில் சமையற்காரராக வேலை செய்கிறார் தனுஷ். ஒரு கட்டத்தில் அவரைப் பற்றிய உண்மைகள் வெளிவரும்போது அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.


ஏற்கனவே கேங்ஸ்டராக இருந்த தனுஷ், அதன் பின் அமைதியாக சமையல்காரர் ஆக இருக்கிறார். இது தான் கதையின் கருவாக சொல்லப்படுகிறது.

மேலும் குறித்த படத்தில் தனுஷ், சந்திப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஆகிய மூவரும் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ளார்கள்.


இதேவேளை, தனுஷ் நடிப்பில் உருவாகும்  ராயன் படத்தின் கதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான  பாட்ஷா படத்தைப் போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement