• Feb 22 2025

சன் டிவிக்கு இம்மீடியட்டா தாவிய பாண்டியன் ஸ்டோர் ஹீரோ! விஜய் டிவி சீரியலில் இனி நடிப்பாரா? இல்லையா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில்  பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குறித்த சீரியலில் பாண்டியனின் மகன்களாக நடிப்பவர்களில் கதிரும் ஒருவர். அதாவது கதிர் பாத்திரத்தில் நடித்து வரும் ஆகாஷ். அவருக்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

தற்போது பாண்டியன் ஸ்டோர் 2ம் பாகத்தில், எதிர்பாராத விதமாக ராஜிக்கும் கதிருக்கும் திருமணம் நடந்து முடிந்து பல்வேறு திருப்பங்களுக்கு மத்தியில் சுவாரஸ்யமாக கதை நகர்ந்து செல்கிறது.


இந்த நிலையில் தற்போது கதிர் பாத்திரத்தில் நடித்த ஆகாஷ், சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள அனாமிகா என்ற திகில் திரில்லர் தொடரில் நடிக்க உள்ளாராம்.

குறித்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


எனவே தற்போது நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இனி நடிப்பாரா? இல்லையா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement