• May 18 2024

பிரபல முன்னணி நடிகருடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா- வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் த்ரிஷா. இவர் விஜய் அஜித் கமல் ரஜினி எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இதனால் மக்கள் மத்தியில் தனக்னெ ஒரு தனி ரசிகர் கூட்டத்தையும் வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மணிரத்தினத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இது ரசிகர்களிடையே பேராதரவை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு மத்தியில், நடிகை த்ரிஷா, 'தி ரோடு' என்னும் படத்தில் தமிழில் நடித்து வருகிறார்.அதேபோல் தற்போது மலையாள நடிகர் சூப்பர்ஸ்டார் மோகன்லால் உடன் ராம் படத்திலும் நடித்து வருகிறார். இதற்கான அறிவிப்பு பல மாதம் முன்பே வந்தது. திரிஷ்யம், பாபநாசம் படப்புகழ் ஜிது ஜோசப் இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. டாக்டராக இந்த படத்தில் த்ரிஷா நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷா இணைந்துள்ளார். கொச்சியில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. போட்டோகிராபர் பென்னட் வர்கீஸ் உடன் த்ரிஷா எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement