• May 18 2024

ப்ளூ ஜீன்ஸ், ஒயிட் டி ஷர்ட்டில் படு கேஷுவலாக லியோ படம் பார்க்க வந்த த்ரிஷா- வெளியாகிய கியூட்டான கிளிக்ஸ்

stella / 6 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும், இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆகி உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, 'லியோ' படத்தின் நான்கு மணி காட்சி மற்றும் ஏழு மணி காட்சிகள் தமிழகத்தில் திரையிடப்படாது என தமிழக அரசு அறிவித்த நிலையில், ஒன்பது மணிக்கு முதல் காட்சி அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது.


முதல் நாள் முதல் காட்சியை பார்க்க, ரசிகர்களோடு பல திரையுலக பிரபலங்களும் திரையரங்குகளில் கூடினர். மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து ஆரவாரம் செய்து தளபதியின் 'லியோ' படத்தை கண்டு ரசித்தனர். இது குறித்த புகைப்படங்கள், இன்று காலை முதலே சமூக வலைதளத்தில் வெளியானது.


இந்நிலையில் லியோ திரைப்படம் இன்று வெளியானதையொட்டி த்ரிஷா சென்னை ரோகிணி தியேட்டரில் படம் பார்த்தார். ப்ளூ ஜீன்ஸ், ஒயிட் டி ஷர்ட்டில் படு கேஷுவலாக வந்திருந்த அவர் தியேட்டரில் இருந்த ரசிகர்களுக்கு கையசைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement