• May 18 2024

இணையத்தில் திடீரென வெளியான லியோ திரைப்படம்- கடும் அதிர்ச்சியில் படக்குழு

stella / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின் என அடுத்தடுத்த வில்லன்கள் விஜய்யுடன் மோதியுள்ளனர்.

பவர்புல்லான வில்லன்களே சிறப்பான ஹீரோக்களை உருவாக்குவார்கள் என்ற வகையில் ஆக்ஷன் த்ரில்லராக வெளியாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்யின் வில்லன்கள் மாஸ் காட்டியுள்ளனர்.


சிறப்பு காட்சியாக 7 மணிக்கு எப்படியாவது படத்தை திரையிட பட தயாரிப்பு தரப்பு எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் தமிழ்நாடு அரசின் அனுமதி கிடைக்காததால் 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. 9 மணிக்குதான் காட்சி என்றால் அதற்கு முன்னதாகவே தியேட்டர் வாசலில் ரசிகர்கள் குழும ஆரம்பித்தனர்.

ஆனால் படம் வெளியான சில மணி நேரத்திலேயே HD பிரிண்ட் இணையத்தில் வெளியாகி உள்ளது.பேருந்தில் ஒருவர் லியோ படத்தை செல்போனில் பார்த்து வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பெங்களுர்ல லியோ பப்ளிக்க ரிவ்யூ எடுத்த முடிச்சிட்டு வாரேன், பஸ்ல ஒருத்தன் பார்த்திட்டு இருக்கார் என்று பதிவிட்டுள்ளார்.


அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி படகுழுவினரை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லியோ படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று தயாரிப்பாளர் கணக்கு போட்டு வைத்திருந்தார். அவர் தலையில் இடியை இறக்கும் வகையில் லியோ முழுபடம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், தியேட்டரில் வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையக் கூடும் என படக்குழுவினர் கலக்கத்தில் உள்ளனர்.


Advertisement

Advertisement