• Sep 22 2023

நடிகை கௌதமியின் சொத்துக்களை ஏமாற்றிப் பறித்த நபர்- இத்தனை கோடி ரூபாயை இழந்துள்ளாரா?

stella / 1 week ago

Advertisement

Listen News!


ஆந்திராவில் பிறந்து கோலிவுட் உலகில் 80களின் பிற்பாதி முதல் 90களில் இறுதிவரை டாப் நடிகையாக திகழ்ந்தவர் தான் கௌதமி. 1987ம் ஆண்டு ஒரு சில கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர், அதன்பிறகு 1988ம் ஆண்டு எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "குரு சிஷ்யன்" திரைப்படத்தில் கீதா என்ற கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமானார்.

அன்று தொடங்கி சுமார் 10 ஆண்டுகள் பல்வேறு திரை துறையில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் உள்ள டாப் கதாநாயகர்கள் அனைவருடனும் இவர் ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் 1998ம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காத கௌதமி தற்பொழுது துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.


இவரின் மகள் போட்டோக்கள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருவதுண்டு.இந்நிலையில் நடிகை கௌதமி தற்போது போலீசில் ஒரு அதிர்ச்சி புகாரை கூறி இருக்கிறார். அழகப்பன் என்பவருக்கு தனது சொத்துக்களை விற்க பவர் கொடுத்து இருந்ததாகவும், அதை தவறாக பயன்படுத்தி தனது சொத்துக்களை ஏமாற்றி இருப்பதாக புகாரில் தெரிவித்து இருக்கிறார்.


இளம் வயதில் இருந்து சம்பாதித்து சேர்ந்து வைத்த 25 கோடி ருபாய் மதிப்புள்ள சொத்தை அவர்கள் ஏமாற்றி இருப்பதாக அவர் புகாரில் கூறி இருக்கிறார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement

Advertisement