• May 11 2024

”இப்போது எங்கள் குடும்பத்தில் மூவர்” - கர்ப்பமாக இருக்கும் ரோஜா சீரியல் நடிகை- கியூட்டானமெட்டர்னிட்டி ஃபோட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவர்ந்த தொலைக்காட்சியாக இருப்பது தான் சன்டிவி.இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பல ரசிகர்களைக் கவர்ந்து வருவதோடு ரி ஆர் பியிலும் முன்னணியில் நிற்கின்றன.அந்த வகையிவ் இதில் டாப் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ரோஜா.

இந்த சீரியலில் ஹீரோவாக அர்ஜுன் என்ற ரோலில் நடிகர் சிபு சூர்யன் நடித்து வருகிறார்.ஹீரோயினாக ரோஜா என்ற ரோலில் நடிகை பிரியங்கா நல்கார் நடிக்கிறார். வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பலர் நடித்து வருகின்றனர்.


இந்த சீரியலின் மிகப் பெரிய வெற்றிக்கு கதாபாத்திரங்களின் நடிப்பு முக்கிய காரணமாக உள்ளது. ஹீரோ ஹீரோயினுக்கு அடுத்தப்படியாக வில்லி கதாபாத்திரத்துக்கு இந்த சீரியலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அந்த வகையில் இதில் வில்லியாக நடித்து வருபவர் தான் விஜே அக்‌ஷயா.


இவர் இந்த சீரியலுக்கு முதல் சன் டிவி-யில் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் வணக்கம் தமிழா ஷோவைத் தொகுத்து வழங்கி இருக்கின்றார்.இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு தனது 2 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடிய விஜே அக்‌ஷயா, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.


கணவருடன் சிம்பிளாக எடுத்துக் கொண்ட மெட்டர்னிட்டி ஃபோட்டோ ஷூட்டை பகிர்ந்து ”இப்போது எங்கள் குடும்பத்தில் மூவர்” என குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement