• May 11 2024

மதன் கார்க்கி இப்பலாம் அதிக பாடல் எழுதாதற்கு காரணம் இதுதானாம்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலக வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக ‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) திரைக்கதை வங்கியை (Script Bank) தொடங்கியுள்ளனர் மதன் கார்க்கி மற்றும் கோ. தனஞ்ஜெயன் அடங்கிய குழுவினர்.

சென்னை, பிப்ரவரி 10, 2023 : திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் தளமாகவும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும், ஓர் புதிய முயற்சி தான் ‘ஸ்கிரிப்டிக்’.

பிரபல பாடலாசிரியர், எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர், மற்றும் 'டூப்பாடூ' போன்ற பல புதிய முயற்சிகளை முன்னெடுத்த மதன் கார்க்கி மற்றும் பிரபல தயாரிப்பாளர்-விநியோகஸ்தர், பாஃப்டா (BOFTA) திரைப்படக் கல்லூரி நிறுவனர் கோ. தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து இந்தியாவிலேயே முதன்முறையாக, “ஸ்கிரிப்டிக்” (SCRIPTick) என்ற பெயரில் ஓர் திரைக்கதை வங்கியை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், மதன் கார்க்கி, பாடலாசிரியராக தமிழில் தற்காலத்தில் அதிக பாடல்களை எழுதாததற்கு காரணம் என்ன என்று கேட்கப்பட்ட போது பதில் அளித்த மதன் கார்க்கி, “தமிழில் நான் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். இருப்பினும் சமீப காலமாய் ஆறு பெரிய படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதுவும் ஒரு காரணமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார். 

அப்போது பேசத் தொடங்கிய தயாரிப்பாளர் தனஞ்செயன், மதன் கார்த்தி சூர்யா 42 உட்பட பெரிய ப்ராஜெக்ட் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி வருகிறார். அவை இதைவிட பெரிய பணிகள். அப்படி இருக்கும் பொழுது அதில் பாடல்களை எழுதுவதற்கான நேரம் அவருக்கு அமையாமல் போகிறது.

ஆனால் அவர் மிகவும் கடுமையாக உழைக்கிறார், நான் கண் முன்னே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். என தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement