தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் கௌசல்யா.இவர் விஜய், சூர்யா, பிரபுதேவா, கார்த்திக், பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார்.இவர் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார்.இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இருப்பினும் படவாய்ப்பு குறையத் தொடங்கியதை அடுத்து குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இறுதியாக ஹிப்ஹோப் ஆதி நடித்த நட்பே துணை படத்தில் நடித்திருந்தார்.இந்த நிலையில் இவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார்.அதில் கூறியதாவது இப்போதும், என்னுடைய திருமணம் பற்றி செய்தி இணையத்தில் வருவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏன் என்றால் மக்கள் இன்னும் என்னை மறக்கவில்லை. ஏதாவது ஒரு விஷயத்தில் என்னைப் பற்றி பேசுவது நல்லது தான்.
நான் திருமணத்தை எதிர்ப்பவள் இல்லை, திருமணம் என்பது ஒரு அழகான விஷயம். எனக்கும் என் கருத்துக்கும் பிடித்தமான ஒருவர் எனக்கு கிடைக்கவில்லை. அப்படி ஒருவர் என் வாழ்க்கையில் இருந்தார். ஆனால் அது பிரேக் அப் ஆகிவிட்டது. இப்போது நான் என் பெற்றோருடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
நான் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போது, எனக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டது. இதற்காக நிறைய மாத்திரைகளை சாப்பிட்டதால், திடீரென உடல் எடை கன்னாபின்னா என்று ஏறிவிட்டது. இந்த காரணத்தால் தான் நான் சினிமாவை விட்டு விலகினேன். இப்போது அந்த பிரச்சனை சரியாகி மீண்டும் பழைய கௌசல்யாவாக வந்து இருக்கிறேன்.
மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது இதற்கான சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். விஜய் தான் என்னுடைய க்ரஷ், அவருடன் சேர்ந்து நடித்த பிரியமுடன் திரைப்படத்தை என்னைக்குமே மறக்க மாட்டேன். அந்த படம் தான் எனக்குமிகவும் பிடித்த படம் என்று கௌசல்யா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Listen News!