• Sep 21 2023

விஜய் தேவரகொண்டாவிடம் சமந்தா பற்றிக் கேட்ட நாகர்ஜுனா... விவாகரத்து ஆனாலும் மருமகள் மேல் பாசம் குறையாத மாமனார்... வீடியோ இதோ..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தாவும், அவரின் காதல் கணவரான நாக சைதன்யாவும் விவாகரத்துப் பெற்று நிரந்தரமாகப் பிரிந்துவிட்டமை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் நாக சைதன்யாவை பிரிந்தாலும் அவரின் தம்பியும், நடிகருமான அகில் அகினேனியுடனான நட்பை இன்றுவரை தொடர்ந்து வருகின்றார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.


இந்நிலையில் சமீபத்தில் சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் 'குஷி' திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தினுடைய ப்ரோமோஷனுக்காக நாக சைதன்யாவின் தந்தையும், சமந்தாவின் முன்னாள் மாமனாருமான நாகார்ஜுனா தொகுத்து வழங்கிய பிக்பாஸ்-7 நிகழ்ச்சிக்கு விஜய் தேவரகொண்டா சென்றுள்ளார்.


அப்போது ஹீரோ விஜய் தேவரகொண்டா மட்டும் வந்திருப்பதை பார்த்த நாகர்ஜுனா, ஹீரோயின் சமந்தா எங்கே என்று கேட்க, அவர் அமெரிக்கவில் இருக்கிறார் என்று விஜய் தேவரகொண்டா பதிலளித்துள்ளார். இந்த வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement