• Apr 27 2024

லியோ படத்தின் காட்சிகள் லீக் ஆகினால் இது கண்டிப்பாக நடக்கும்- தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடித்த வரும் திரைப்படம் தான் லியோ.இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குவதோடு இசையமைப்பாளராக அனிரூத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் காஷ்மீர் படப்பிடிப்பில் இருந்து லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகின. இதனால் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் டுவிட்டரில் ஒரு ட்வீட் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


அதில் "லியோ படத்தின் லீக் செய்யப்பட்ட புகைப்படங்கள் & வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தால் அந்த பதிவுகள் உடனடியாக முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement